அறிவியலை கொண்டாடுவோம் மாநாட்டில்
திருச்சி மாவட்ட ஆசிரியர்கள் 4 பேருக்கு விருது.
அறிவியலை கொண்டாடுவோம் மாநாட்டில் பங்கேற்று விருதுகளை பெற்றுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 4 பேருக்கு கல்வித்துறை மற்றும் ஆசிரியர்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன..
நிகழாண்டு 2024 ஆம் ஆண்டுக்கான அறிவிலைக் கொண்டாடுவோம் மாநாடு சேலத்தில் டார்வின் அறிவியல் கழகம் சார்பில் பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதுமிருந்து தேர்வு செய்யப்பட்ட ஏராளமான ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்றனர். நிகழ்வில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் பங்கேற்று கெளரவிக்கப்பட்டுள்ளனர். முசிறி ஒன்றியத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை ம.தனலட்சுமி, புள்ளம்பாடி அரசுப்பள்ளி ஆசிரியை அ.ஜான்சிராணி, திருவெறும்பூர் ஒன்றியம் அரசுப்பள்ளி ஆசிரியை ம.சித்ராதேவி, மணப்பாறை அரசுப்பள்ளி ஆசிரியர் மு.பாண்டியன் ஆகிய நால்வருக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெங்களூர் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இயக்குனர் வி. டில்லி பாபு (விஞ்ஞானி) ஆகியோர் பங்கேற்று, தேர்வுசெய்யப்பட்டோருக்கு சிந்தைக்கூரியன் விருது மற்றும் கொடுநுகம் (சிறந்த ஆசிரியர் ) விருதுகளை வழங்கி கொடுத்து பாராட்டினர்.
மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமாரிடமும் வாழ்த்துக்களை பெற்றனர்.விருதுபெற்ற ஆசிரியர்களை திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் சகபள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். விருதுபெற்ற ஆசிரியர்கள் கல்வித்துறையினர் மற்றும் டார்வின் அறிவியல் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.