பா.ம.க, தே.மு.தி.க ஏலம் போடும் அரசியலை கைவிட வேண்டும்.
தி.க தலைவர் கி.வீரமணி திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய இணையமைச்சர் எல். முருகனின் ஜாதியை குறிப்பிட்டு டி.ஆர் பாலு பேசவில்லை. அமைச்சரான அவரின் செயல்பாடுகள் குறித்து தான் டி.ஆர்.பாலு பேசினார்.
எல்.முருகன் இணை அமைச்சராக இருந்தபோதும் அவர் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிதி கூட பெற்று தரவில்லை அதையெல்லாம் வைத்து தான் டி.ஆர்.பாலு அவ்வாறு பேசினார். ஆனால் அதனை ஜாதி ரீதியாக திரித்து பரப்புவது ஆர்.எஸ்.எஸ் எப்பொழுதும் செய்யும் யுக்தி.
பா.ம.க, தே.மு.தி.க ஏலம் போடும் அரசியலை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்