தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எப்படி ரிட் தாக்கல் செய்ய முடியும்? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமா? என கேள்வி நீதிபதிகள் எழுப்பினர்.

இந்த விசாரணையில் மாவட்ட ஆட்சியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல, விசாரணைக்காக மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டது என அமலாக்கத்துறை வாதம் செய்தது. ரிட் தாக்கல் செய்ய முடியும் என தமிழ்நாடு அரசு பதில் வாதம் செய்தது. இவ்வழக்கின் விசாரணை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். முன்னதாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக தமிழக அரசின் பொதுப் பணித்துறைச் செயலார், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலார் மற்றும் 5 மாவட்ட கலெக்டர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் அமலாக்கத்துறை சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.