திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையருக்கான சிறப்பு பயிலரங்கம்.
திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கான சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது.
ஹோலிகிராஸ் கல்லூரியின் முதுகலை புனர்வாழ்வு அறிவியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறை வாழ்நாள் வரை கற்றல் துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான மையம் சார்பில், நடைபெற்ற இந்த சிறப்பு பயிலரங்கில், மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கையர்) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டத்தின்கீழ், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலை வாய்ப்புகள், சவால்கள் மற்றும் எதிர்கால நோக்கங்கள் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான எம்.பிரபாவதி பேசினார்.
மருத்துவர்கள் டி. குமுதவல்லி, டி. நிர்மலா ஆகியோர் பேசினர். சீகல் மற்றும் டால்பின் பயிற்சி மையத்தின் இயக்குனர் பிரவீனா கார்மல், கஜோல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மருத்துவர் ரமேஷ், இணை பேராசிரியர் நாகலட்சுமி உள்ளிட்டோர் அரசு திட்டங்கள் குறித்து விளக்கினர். மாற்றுத்திறன் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் பங்கேற்றனர்.