திருச்சியில் இன்று நடந்தது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு
ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என அறிவிப்பு.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில பொது குழு கூட்டம் திருச்சியில் இன்று தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் ஹபிபுர் ரகுமான். மாவட்ட செயலாளர் ஹக்கீம் மற்றும் மாநில முழுவதும் இருந்து திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் நவாஸ் கனி , ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் என்று தேசிய தலைவர் காதர்மொய்தீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற அயராது பாடுபடுவது, பாஜக ஆட்சியை அகற்ற அயராது உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.