12 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. கன்னியாகுமரி மாணவன் மீது பாய்ந்தது போக்சோ.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியை திருப்பூர் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பிரகாஷ் (23) என்பவர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது. தலைமறைவான பிரகாஷை போலீஸார் தேடி வருகின்றனர்.
கடந்த மாதம் 19ம் தேதி பள்ளிக்கூடம் சென்று திரும்பிய மாணவியை அங்கிருந்து அழைத்து ரயில் மூலமாக திருப்பூர் சென்றுள்ளார். அங்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்க வைத்து திருமண ஆசை காட்டி சுமார் 12 நாள்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் விசாரணையில் மாணவி வாக்குமூலம்.
மகளைக் காணவில்லை என மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் மாணவியை மீட்டு போக்ஸோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார்.