தமிழகம் முழுவதும் திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் அவர் பரவலாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று கரூர் தொகுதியில் ஜோதிமணிக்காக பிரச்சாரம் செய்த கனிமொழி இன்று கோவையில் பிரச்சாரம் செய்கிறார்.
அவர் இந்த பிரச்சாரத்தில், “பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. ஏழை விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது. மக்களவைத் தேர்தலில் நிச்சயமாக பாஜக ஆட்சிக்கு வராது. திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி சிக்கல்கள், குளறுபடிகள் தீர்க்கப்படும். அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜக ஆட்சி. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்“ என்று பேசினார். கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நிலையில் அவருடைய தொகுதியில் வந்து கனிமொழி எம்பி காரசாரமாக பிரச்சாரம் செய்துள்ளார்.