இன்று சென்னையில் இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணமாகி அதன் பிறகு விவாகரத்து பெற்றார். தற்போது மீண்டும் அவர் தருண் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 15ம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக ஷங்கர் திருமண பத்திரிகையை பிரபலங்களுக்கு கொடுத்து வந்தார். இன்று சென்னையில் சிறப்பாக இத்திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு பரிசையும் அளித்தார்.