இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுத்தது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் இடங்கள் குறித்த தகவலை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் ஏப்ரல் 28ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் மட்டும் 28ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது