பெண் காவலரை துப்பாக்கி முனையில் எஸ்ஐ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காளேஸ்வரம் காவல் நிலையத்தில் பவானிசென் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணிபுரிந்தார். அவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் தலைமை காவலரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துப்பாக்கி முனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுவதோடு இதை வெளியில் கூறினால் கடுமையாக விளைவுகள் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளாராம். பவானிசென் குற்றம் உறுதியானதால் அவர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் மூன்று பெண் காவலர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.