நாளை கள்ளக்குறிச்சி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை அதிமுக குழுவுடன் சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கள்ளச்சாராய மரணம் அதிகரித்துள்ளது. அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்து முதலமைச்சர் அடக்குமுறையைக் கையாளுகிறார், மருந்து விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தன்னை கிண்டல் செய்கிறார். ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல. கள்ளச்சாராய மரணம் தொடர்பான விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். மேலும் கள்ளச்குறிச்சி சம்பவத்தில் தனி நபர் ஆணையம் மூலம் நீதி கிடைக்காது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை அதிமுக குழு நாளை சந்திக்க இருக்கிறோம்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.