கர்நாடகாவிலும் நிலச்சரிவா?

Filed under: இந்தியா |

 

கேரளாவை அடுத்து கர்நாடக மாநிலத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று கர்நாடக மாநிலத்திலுள்ள ஹாசன் மாவட்டத்தில் மங்களூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூரு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சீரடி காட் சக்லேஷ்பூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து போக்குவரத்தையும் கர்நாடக மாநில அரசு தடை செய்துள்ளது. ஏற்கனவே கேரளாவில் நிகழ்ந்த நிலச்சரிவு காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் எதுவும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.