கேரளாவில் சமீபத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு அதில் 275 பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர். தற்போது அடுத்ததாக கேதார்நாத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற 200 யாத்ரீகர்கள் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேற்று திடீரென கேதார்நாத்தில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டதாகவும் அதனால் கன மழை பெய்ததில் மந்தாகினி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து தகவலறிந்த மாநில பேரிடர் படை காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீட்பு பணியை களத்தில் இருந்து செய்து வருகின்றனர். கேதார்நாத்தில் 150 முதல் 200 யாத்ரீகர்கள் சிக்கியிருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் சன்னதிக்கு செல்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கேதார்நாத்தில் மேக வெடிப்பு காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. தற்போது மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கேதார்நாத் நடைபாதை மூடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் இதுவரை எந்தவொரு உயிரிழப்பு தகவல்களும் வெளிவரவில்லை என்று கூறப்படுகிறது.