உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் சீனாவின் புகார் நகரில் இருந்து பரவியது. இந்த வைரஸின் தாக்கத்தால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளை விட இந்திய மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் பெருமளவில் பாதிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், ஊரடங்கு உத்தரவு சரியான சமயத்தில் பிறப்பிக்கப்பட்டதால் வைரஸை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தியாவில் வைரஸின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடுவதற்கு 109 நாட்கள் ஆகியது. ஆனால், கடந்த ஒன்பது நாட்களில் 50 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
மேலும், பாதிக்கப்படுவர்களும் மற்றும் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. ஏப்ரலில் 3.38% ஆக இருந்த இறப்பு விகிதம் தற்போது 2.87% ஆக குறைவாக உள்ளது. இதுவரை இந்தியாவில் 67 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
இந்த வைரசின் தாக்கம் இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.