உலக சுகாதார நிறுவனத்துடன் இருக்கும் அனைத்து உறவை நிறுத்திக் கொள்கிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்பட்ட நிதி உதவிகளை நிறுத்திக் கொள்கிறோம் என அறிவித்த டிரம்ப் அந்த மருத்துவ நிதி சேவையை இதர தொண்டு அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது என டிரம்ப் கூறியுள்ளார்.
தற்காலிகமாக வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. கொரோனாவை உலகம் முழுவதும் பரவச் செய்த சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு சாதகமாக பல உண்மைகளை மறைத்து வருகிறது என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் உலக சுகாதார நிறுவனத்துடன் இருக்கும் அனைத்து உறவுகளை நிறுத்திக் கொள்கிறோம் என அறிவித்துள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் எப்படி பரவியது என சீனா பதில் அளிக்க வேண்டும் மற்றும் உலக நாடுகளுக்கு செய்யப்படும் கடமைகளை செய்வதற்கு உலக சுகாதார நிறுவனம் தவற விட்டது என டிரம்ப் கூறியுள்ளார்.