மாடுகளை பாதுகாக்கும் அடிப்படையில் பசுவதை தடுப்பு சட்டத் திருத்தத்திற்கு உபி மாநில அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து உள்ளது.
தற்போது இருக்கும் சட்டத்தை மிக ஒழுங்காகவும் மற்றும் பயனுடையதாகவும் மாநிலத்தில் பசுவதை முழுமையாக நிறுத்தும் நோக்கத்துடன் இந்த திருத்த சட்டத்தை கொண்டு வரப்படுகிறது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரபிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்படுகிறது.