விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிப்படைந்த 18 மாத ஆண் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழப்பு. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருக்கும் நீர்பெருந்தகரம் என்ற கிராமத்தில் பழனி என்பவரின் 18 மாத ஆண் குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு 26.06.2020 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அந்த குழந்தை நேற்றிரவு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துவிட்டது.
இறந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை நடத்திய முடிவுகள் வரும் முன்பே குழந்தை நேற்றிரவு இறந்துவிட்டதால் உடலை பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. இதனை அடுத்து குழந்தையின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று எரித்து உள்ளனர்.
பின்பு தான் குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.