கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனியார் டிவியின் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு!

Filed under: சென்னை |

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தனியார் டிவியான ராஜ் டிவியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

இவருக்கு கடந்த 15 நாட்களாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த இரு நாட்களாக அவருடைய உடல் நிலையில் மோசமானதால் சிகிச்சை பலனின்றி இன்று காலைகாலமானார்.

இவருடைய மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு க ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர்.