சிங்கப்பூரின் பிரதமர் லீ செய்ன் லூங். இவரின் பீப்பிள் ஆக் ஷன் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. இவரின் ஆட்சிக் காலம் முடிய 10 மாதங்கள் உள்ள நிலையில் பிரதமர் லீ செய்ன் முன்பே தேர்தலை அறிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் மீறி தேர்தல் நேற்று நடந்தது. இதற்காக வந்த மக்கள் முககவசம், கையுறைகள் ஆகியவற்றை அணிந்து பாதுகாப்பாக வாக்களித்தனர். பிறகு கொரோனா தொற்றின் காரணத்தால் வாக்குச் சாவடிகள் அதிகமாக அமைத்துள்ளனர்.
காலையில் இருந்து இரவு 8:00 மணிக்கு வரை தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வமாக வரிசையில் வந்து வாக்கு அளித்தனர். இதன் பின்னர் வாக்குப்பதிவு எண்ணிக்கை பாதுகாப்பாக நடந்தது. இதில் 93 இடத்தில் நடந்த தேர்தலில் 83 இடங்களை வென்று ஆளும் கட்சியான பீப்பிள் ஆக் ஷன் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில் தேர்தலில் மீண்டும் வென்ற லீ செய்ன் லூங்கிற்கு ட்விட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் ட்விட்டரில் கூறியது: தேர்தலில் வென்ற பிரதமர் லீ செயின் லூங்கிற்கு பாராட்டுகள். சிங்கப்பூர் மக்களுக்கு அமைதியான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.