சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
2.34 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பிளாஸ்மா வங்கி மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கப்படும். கொரோனாவில் இருந்து குணமடைந்து 14 நாட்கள் பிறகு பிளாஸ்மா தானம் செய்யலாம். இதில் 18 முதல் 65 வரை உள்ளவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு முன் வரவேண்டும்.
இதன் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது: தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்துள்ளது. ஒரே சமயத்தில் ஏழு நபர்கள் பிளாஸ்மா தானம் கொடுக்கலாம். அனைவரும் பிளாஸ்மா தானம் கொடுப்பதற்கு முன் வரவேண்டும்.
தமிழ்நாட்டில் ஏழு இடத்தில் பிளாஸ்மா சிகிச்சை கொடுக்கப்படும். சென்னை ஓமந்தூரார், ஸ்டான்லி, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், சேலம், திருச்சி, கோயம்பத்தூர், திருநெல்வேலி ஆகிய அரசு மருத்துவனையில் சிகிச்சை கொடுக்கப்படும். பிளாஸ்மா சிகிச்சை மூலம் அதிகமான குணமடைந்துள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.