பத்து ஆண்டுகளை கடந்தாலும் கொரோனா பரவால் தொடரும் – WHO தகவல்!

Filed under: உலகம் |

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் 10 ஆண்டுகள் கடந்தாலும் தொடரும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

இதனைப் பற்றி டெட்ராஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது: உலக நாடுகள் அனைத்தும் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது பெருமளவில் சுகாதார பிரச்சினையை சந்தித்து வருகிறது. கடந்த 1918 ஆம் ஆண்டு “ஸ்பானிஷ் புளு” பல கோடிக்கணக்கான உயிர்களை பறித்து சென்றது. தற்போது இந்த கொரோனாவால் 1.80 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 6.80 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

இந்த வைரசால் உலக நாடுகளின் பொருளாதாரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்று 10 ஆண்டுகளைக் கடந்தாலும் தொடரும் என தெரிவித்தார். பின்பு கடந்த ஜூன் 30ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் கொரோனாவை பற்றிய உலக நாடுகளுக்கு சுகாதார எச்சரிக்கை விடுத்தது.