கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

Filed under: உலகம் |

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஐந்து மாதத்துக்கு மேலாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரசால் இதுவரை 1.5 கோடிக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றின் பரவல் சில நாடுகளில் அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதைப் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது: கொரோனா தொற்றின் பரவல் சில நாடுகளில் அதிகரித்துள்ளது. சிறு நாடுகளில் கூட பாதிப்பு அதிகமாக உள்ளது. உலக அளவில் கொரோனா மூன்றில் இரண்டு பங்கு 10 நாடுகளில் தான் உள்ளது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க போராட வேண்டும்.

இந்த வைரஸால் அமெரிக்காவில் ஒவ்வொரு மணி நேரமும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும், நான்காவது இடத்தில் ரஷ்யாவும் இருக்கின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.