தற்போது சில நாட்களாக கிளீன் இந்தியா என்கிற சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் சினிமா நட்சத்திரங்கள் இடையே பரவி வருகிறது. இந்த சேலஞ்சை ஏற்கும் சினிமா நட்சத்திரங்கள் அவர்களுடைய வீட்டில் செடிகளை நட்டு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோ உடன் மற்ற சினிமா நட்சத்திரங்களை குறிப்பிட்டு சேலஞ்ச் செய்து வருகின்றனர்.
கடந்த 9ஆம்தேதி மகேஷ்பாபுவின் பிறந்த நாள். அன்று அவருடைய வீட்டில் ஒரு செடியை நட்டு வீடியோவாக எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் பிறகு அவருடைய ட்விட்டர் பதிவில் இந்த சேலஞ்சை ஜூனியர் என்டிஆர், தளபதி விஜய், ஸ்ருதிஹாசன் ஆகிய மூவருக்கும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த சேலஞ்சை ஏற்று அவருடைய வீட்டில் செடியை நாட்டு வைத்துள்ளார். அந்த புகைப்படங்களை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், இது உங்களுக்காக தான் மகேஷ் பாபு இங்கே ஒரு பசுமையான இந்தியா மற்றும் நல்ல ஆரோக்கியம். நன்றி என பதிவிட்டார்.