சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்நிலையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று பேசினார். அதில் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு உலக நாடுகள் பெரும் போரை எதிர்கொண்டு வருகிறது. சீனா அதன் உள்நாட்டு விமான சேவையை நிறுத்தி விட்டு, வெளிநாட்டிற்கு விமான சேவைக்கு அனுமதி கொடுத்து கொரோனாவை உலகம் முழுவதும் பரவ செய்து லட்சக்கணக்கான பலி எண்ணிக்கையை உருவாக்கி விட்டதாக கடுமையாக சாடினார்.
மேலும், உலக சுகாதார அமைப்பு தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனா திட்டமிட்டு தான் உலகம் முழுவதும் கொரோனா வைரஸை பரப்பி உள்ளது எனவும் இதற்கு ஐ.நா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.