சீனா முன்னதாகவே திட்டமிட்டு தான் தாக்குதலை நடத்தியுள்ளது – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றசாட்டு!

Filed under: இந்தியா |

இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா முன்னதாகவே திட்டமிட்டு உள்ளது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றசாட்டி உள்ளார்.

லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் காரணமாக பதற்றம் கிளம்பியுள்ள நிலையில் சீனா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ – ஐயுடன் இந்தியா நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த சமயத்தில் எல்லையில் நடந்த மோதல் மற்றும் உயிரிழப்புக்கு சீனா நாடு தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் வலியுறுத்தி உள்ளார். பின்னர் நடந்த சம்பவத்துக்கு அவருடைய கவலையை தெரிவித்துள்ளார்.

மேலும், பல விஷயங்களை பற்றி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ – ஐயுடன் விவாதித்துயுள்ளார்.