இந்தியாவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா: டோனி சதம் வீண்

Filed under: விளையாட்டு |

australia_india_odi3_010இந்தியாவுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பால்க்னர், வோஜஸ் அரைசதம் அடித்து கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியின் முடிவில் தொடர் 1-1 என்று சமநிலை வகிக்கிறது.

மூன்றாவது போட்டி மொகாலியில் இன்று நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 303 ஓட்டங்கள் எடுத்தது.

வீராட் கோஹ்லி அரைசதம் கடந்து 68 ஓட்டங்களும், அஷ்வின் 28 ஓட்டங்களும், டோனி சதம் கடந்து 139 ஓட்டங்களும் எடுத்தனர். அவுஸ்திரேலியா சார்பில் ஜான்சன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

சவாலான இலக்கை விரட்டிய அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 304 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஹியுஸ் 22 ஓட்டங்களம், பின்ச் 38 ஓட்டங்களும், அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி 43 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆட்டமிழக்காமல் அரைசதகம் கடந்து ஆடம் வோஜஸ் 76 ஒட்டங்களும், பால்க்னர் 64 ஓட்டங்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் வினய் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.