ஒருநாள் போட்டி: 75 பந்துக்குள் பல முறை சதம் அடித்த ஐந்து அதிரடி வீரர்கள் – யார் என்று பார்ப்போம்!

Filed under: விளையாட்டு |

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சதம் அடிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. அதுவும் 100 ரன்களை குறைந்த பந்துக்குள் அடிப்பது கடினமான விஷயம். ஒருநாள் போட்டிகளில் 75 பந்துகளில் சதம் அடித்த 5 அதிரடி வீரர்கள்.

தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். இவரை சூப்பர்மேன், மிஸ்டர் 360 போன்ற பெயர்களில் செல்லமாக அழைப்பார்கள். இவர் ஒருநாள் போட்டிகளில் 47 சதங்கள் அடித்துள்ளார். அதில் ஒன்பது சதங்களை 75 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் இவர் இரட்டை சதம் அடித்த வீரர்களில் ஒருவர் ஆவார். இவர் இதுவரை 38 சதங்கள் அடித்துள்ளார். அதில் ஏழு முறை 75 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர். இவர் இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டர் ஆவார். 10 சதங்கள் அடித்துள்ளார் அதில் ஏழு சதம் 75 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்சூர்யா. இவர் பிரபலமான இடதுகை பேட்ஸ்மேன் ஆவார். இவர் 28 சதங்கள் அடித்துள்ளார். அதில் 5 சதங்கள் 75 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் சாகித் அப்ரிடி. இவர் 398 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் நான்கு முறை 75 பந்துகளில் சதம் அடித்துள்ளார். அதில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 36 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.