கன்பெராவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக தவான், கேஎல். ராகுல் களமிறங்கினர். தவான் (1), கோலி (9), மணீஷ் பாண்டே (2), சாம்சன் (23) என விரைவில் பெவிலியன் திரும்பினாலும், கேஎல் ராகுல் அபாரமாக ஆடினார்.
அரைசதம் கடந்த அவர் 51 ரன்னில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவும் 16 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
ஆனால், ஒரு நாள் தொடரில் இந்திய அணிக்கு கைகொடுத்த ஜடேஜா இந்தப் போட்டியிலும் அதிரடி காட்டினார். ஒரு கட்டத்தில் 150 ரன்களை இந்திய அணி எட்டுமா..? என்று இருந்த நிலையில், ஆஸ்திரேலியா பந்துவீச்சை சிக்சருக்கும், பவுண்டரிகளுக்கும் ஜடேஜா பறக்கவிட்டார்.
பேட்டிங் செய்யும் ஏற்பட்ட தசைபிடிப்பினால் மேற்கொண்டு 2வது இன்னிங்சில் ஜடேஜாவால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், அவருக்கு பதிலாக மாற்று வீரராக சஹால் களமிறக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. ஐசிசியின் புதிய விதிகளின்படி, மாற்று வீரராக களமிறங்குபவரால் பந்து வீசவும், பேட்டிங் செய்யவும் முடியும். எனவே, ஜடேஜாவிற்கு பதிலாக சாஹல் பந்து வீசும் வாய்ப்பை பெற்றார்.
இதற்கு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், 3வது நடுவர் டேவிட் பூசனிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு, அவர் விதிகளை விளக்கிய பிறகு அவர் அமைதியாக சென்றார்.
இந்திய அணி 10 ஓவர்கள் வீசிய நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முதல் இரண்டு விக்கெட்டுக்களை சாஹல் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.