மேளதாளங்களுடன் பாஜாகாவில் இணைந்தது நடிகர் சிவாஜி மகனின் குடும்பம்.. !!குஷ்பு உள்ளிட்டோர் வரவேற்பு

Filed under: அரசியல்,தமிழகம் |

சென்னை : நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று பாஜகவில் இணைந்தனர்.

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தலைவர் எல் முருகனை, மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகனும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ராம் குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் ஆகியோர் நேற்று சந்தித்தனர். அப்போது, அவர்கள் பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ராம்குமார், “குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போதே மோடியின் தீவிர ரசிகன் நான். குஜராத்திலும், பாஜகவிலும் இருக்கும் எனது நண்பர்களின் மூலம் கவரப்பட்டு, பாஜகவில் நான் இணைகிறேன்.

இனி பாஜகதான் தமிழகத்தின் எதிர்காலம்,” எனக் கூறினார்.

இந்த நிலையில், சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவியின் முன்னிலையில் ராம்குமார் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அவருடன் மகன் துஷ்யந்த் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர். அவர்களை பாஜக மாநிலதலைவர் முருகன், குஷ்பு உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.