ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகலரயில் பாதை குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மத்தியரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து உரையாடினார்.
மக்களின் ஒட்டுமொத்தவளர்ச்சிக்கும்,அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும்அகலரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்றும்டாக்டர் முருகன் கேட்டுக்கொண்டார்.
இது பாரம்பரிய நகரமான காஞ்சிபுரத்தை, ராமாயணம் சுற்றுலா இணைப்புப்பாதையோடு இணைக்க உதவும். இது உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த இரண்டு கோரிக்கைகளையும் விரிவாக விவாதித்தார். மேலும், தமிழ்நாட்டின் ரயில்வேத் துறையை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.