தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை வானிலை ஆய்வு மையம் தகவல்

Filed under: தமிழகம் |

சென்னை, செப் 22:
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல், விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், வேலூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.