திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு பேர் சேர்ந்து ஒரு நபரை கொன்று நாடகமாடியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளை பெரும்பாள்புரம் என்ஜிஓ காலனியை சேர்ந்த சண்முகத்திந்ன மகன் ஹரிஹரமுத்து(23). கூலித் தொழிலாளினான இவருக்கு, பிரீத்தம், செல்வராஜ், செல்வகுமார், சுகுமார் ஆகிய நான்கு நண்பர்கள் இருந்தனர்.
பிரீத்தம் பிறந்த நாளுக்கு அவரது வீட்டில் பார்ட்டியின் போது ஏற்பட்ட மோதலில் பிரீத்தம், செல்வராஜ், சுகுமார், செல்வகுமார் ஆகிய 4 பேரும் ஹரிஹரமுத்து என்ற வாலிபரை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டு விபத்து ஏற்பட்டதாக நாடகமாடிய நண்பர்கள் 4 பேர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.