பல்கலைக்கழகக் மானிய குழு தமிழகத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், புதிய கல்விக் கொள்கைக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அதன்படி தமிழகத்தில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி நிறுவனம் அறிவுறித்தியுள்ளது.
இந்த அறிவிப்புகள் மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக வல்லுநர் குழுவை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் யுஜிசி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.