ஏபி. டி வில்லியர்ஸின் அசத்தலான ஐபில் லெவன் அணி – இவரா கேப்டன்!

Filed under: விளையாட்டு |

உலக கிரிக்கெட் போட்டியில் 360 டிகிரி என அழைக்கப்படுபவர் தென்ஆப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ். இவர் மைதானத்தில் அனைத்து திசைகளிலும் பந்துகளை சிதற அடிப்பவர் என்பதால் 360 டிகிரி என அனைவராலும் அழைக்கப்படுகின்றார்.

வில்லியர்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியில் அனைத்து காலகட்டத்திலும் சிறப்பாக விளையாடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

இந்த லெவன் அணியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனியை இவருடைய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸின் லெவன் அணி இதோ:

1.சேவாக் 2.ரோகித் சர்மா 3.விராட் கோலி 4.எம்.எஸ் டோனி (கேப்டன்) 5. ஏபி. டி வில்லியர்ஸ் 6.பென் ஸ்டோக்ஸ் 7.ஜடேஜா 8.ரஷித் கான் 9.புவனேஸ்வர் குமார் 10.பும்ரா 11.ரபடா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.