இந்தியாவின் சிறந்த கேப்டன் எம்.எஸ் டோனி – முன்னாள் கிரிக்கெட் வீரர் பாராட்டு!

Filed under: விளையாட்டு |

இந்திய அணியின் கேப்டன்களில் எம்.எஸ் டோனி தான் சிறந்தவர் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் டோனி. இவர் இந்தியாவுக்காக இரண்டு உலக கோப்பையை பெற்று தந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை மற்றும் 201 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை பெற்று தந்துள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்கு பின் எந்த ஒரு சர்வதேச விளையாட்டுகளிலும் டோனி பங்கேற்கவில்லை. இதனால் அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என சமூக வலைதளங்களில் பல செய்திகள் வருகிறது.

தற்போது சையது கிர்மானி கூறியது: என்னைப் பொறுத்தவரை இந்திய கேப்டன்களில் எம்.எஸ் தோனி தான் சிறந்த கேப்டன். மற்ற கேப்டன்களுடன் ஒப்பிடும் போது டோனி சிறப்பானவர். இதை நான் மரியாதையுடன் தெரிவிக்க நினைக்கிறேன். ஏனென்றால் இப்படி சொல்வது எனக்கு கேப்டனாக இருந்தவர்களின் இருந்தவர்களின் மனதில் காயத்தை உண்டாகும். ஆனால், சில உண்மையை ஏற்றுக்கொள்வதில்லை.

இவ்வாறு இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி கூறியுள்ளார்.