*தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் அஜித்.*
*கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்*
*நடிகர் அஜித் காதுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு ஒன்றில் வீக்கம் இருந்ததால் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.*
*நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு இன்று நலமுடன் வீடு திரும்பினார் அஜித்.*
*அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நடிகர் அஜித் செல்ல உள்ளார் மேலாளர் சுரேஷந்திரா அறிவிப்பு.*