முன்னாள் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

Filed under: தமிழகம் |

ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு ஏற்பட்ட நெஞ்சிவலியல் தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு தஞ்சாவூரில் இருக்கும் அவருடைய நண்பர்களை சந்தித்தது உள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு வந்துள்ளது.

இதனை அடுத்து அவரை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.