சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணம்!

Filed under: சினிமா |

சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பெருமளவு பிரபலமடைந்தார். வடிவேல் பாலாஜி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர் கூட்டத்தையே கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு காரணத்தினால் இரண்டு கைகளும் வதம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு 42 ஆகிறது.

அவருடைய மரணம் அவரின் குடும்பத்தையும், ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.