“பிளாக் பேந்தர்” படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் காலமானார்!

Filed under: உலகம் |

“பிளாக் பேந்தர்” கதாபாத்திரத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் புற்றுநோய் காரணத்தினால் நேற்று உயிரிழந்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் (Chadwick Boseman) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலம் இல்லாமல் உயிரிழந்தார். அவருக்கு 43 வயது ஆகிறது. பிளாக் பேந்தர், 21 பிரிட்ஜஸ், அவஞ்சர்ஸ் இன்பினிடி வார், அவஞ்சர்ஸ் என்ட் கேம், கேப்டன் அமெரிக்கா சிவில் வார் உள்பட படங்களில் நடித்து உள்ளார்.

சாட்விக் நடித்ததில் பிளாக் பேந்தர், அவஞ்சர்ஸ் பட வரிசைகளில் அவரின் கதாபாத்திரங்கள் அவருக்கு உலக அளவில் உள்ள ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. சாட்விக் கடந்த நான்கு வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.