மகளிர் தின விழாவையொட்டி புத்தூர் விழியிழந்தோர் பள்ளியில் மாணவிகளுக்கு உதவிகள்.
பொதுத்துறை இன்சூரன்ஸ் தொழிலாளர்கள் சார்பில் வழங்கப்பட்டது.
பெண்மையை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 – ந் தேதி சர்வதேச மகளிர் தினம்
கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினம் பெண்களின் சாதனைகள், போராட்டங்கள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான உரிமையை நினைவுகூரும் நாளாகும்.
2024 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் சமூகத்தில் உள்ள அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தையொட்டி திருச்சியில்
பொதுத்துறை இன்சூரன்ஸ் தொழிலாளர்கள் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள புத்தூர் விழி இழந்தோர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 92 மாணவிகளுக்கு
பல நலத்திட்ட உதவிகளை வழங்கி பார்வைத்திறன் குறைபாடு உடைய குழந்தைகளை ஊக்குவித்தனர்.
இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் சிறப்புரையாற்றினார். விழாவில் இன்சூரன்ஸ் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.