2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற முடிவு எடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி ஒரு பேட்டியில் ஆரோன் கூறியது; இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையுடன் ஓய்வு பெற முடிவு எடுத்து இருக்கிறேன். அது என்னுடைய லட்சியம். அந்த வருடத்துடன் எனக்கு 36 வயது ஆகிறது. அதுவரை உடல் தகுதி சிறப்பாக விளையாட ஒத்துழைக்க வேண்டும்.
கிரிக்கெட் வீரர்கள் ஆண்டுக்கு 10 அல்லது 11 மாதங்கள் விளையாடி வருகிறோம். இதனால் ஓய்வு எங்களுக்கு பெரிய அளவில் கிடைகாது. தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தினால் நல்ல ஓய்வு கிடைத்தது. நான் 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை போட்டி வரை விளையாட வேண்டும் என நினைத்திருந்தேன்.
மேலும், அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய விளையாட இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.