Home » Entries posted by admin (Page 25)
Entries posted by admin

சர்தார் பட்டேல் விருது: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

Comments Off on சர்தார் பட்டேல் விருது: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
சர்தார் பட்டேல் விருது: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

புது டெல்லி,மே 04 தேசிய  ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பங்களிப்பவர்களுக்கான மிக உயரிய சிவில் விருதாக சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருதை, சர்தார் வல்லபாய் படேலின் பெயரில் மத்திய அரசு நிறுவியது. இந்தத் துறையில் எழுச்சியூட்டும் வகையில் குறிப்பிடத்தகுந்த பங்களித்திருக்கும் தனி நபர்கள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகளை அங்கீகரித்து, வலிமையான, ஒற்றுமையான இந்தியாவின் மதிப்பை வலுப்படுத்துவது இந்த விருதின் நோக்கமாகும். இந்த விருதுக்கான நியமனங்கள்/பரிந்துரைகளை வரவேற்று 20 செப்டம்பர், 2019 அன்று ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டது. https://nationalunityawards.mha.gov.in என்னும் […]

Continue reading …

ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

Comments Off on ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்!
ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

சென்னை,மே 4 தமிழகம், இந்தியாவிலேயே அதிக அளவில் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் சாலை உட்கட்டமைப்பானது இன்றியமையாததாகும். சாலை உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க பல்வேறு முகமைகளோடு ஆலோசித்து புதுமையான வழிமுறைகளை மாண்புமிகு அம்மா அவர்கள் கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று, செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை – Performance Based Maintenance Contract (PBMC) ஆகும். இதில், ஒப்பந்ததாரர் மூலம் ஒரு மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சாலைகள் மற்றும் அதில் உள்ள […]

Continue reading …

வீர மரணமடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி!

Comments Off on வீர மரணமடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி!
வீர மரணமடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி!

புது டெல்லி,மே 04 ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில் வீர மரணமடைந்த துணிவுமிக்க சிப்பாய்களுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். ஹந்த்வாராவில் வீர மரணமடைந்த துணிவுமிக்க சிப்பாய்களுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் அஞ்சலிகள். அவர்களின் வீரமும், தியாகமும் என்றும் மறக்கப்படாது. நாட்டுக்காக உச்சபட்ச அர்ப்பணிப்போடு சேவை புரிந்த அவர்கள், மக்களை காப்பாற்ற ஓய்வின்றி உழைத்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல்கள், என்று பிரதமர் கூறினார்.

Continue reading …

பழங்குடியினருக்கு உதவ மத்திய அரசு அறிவுரை!

Comments Off on பழங்குடியினருக்கு உதவ மத்திய அரசு அறிவுரை!
பழங்குடியினருக்கு உதவ மத்திய அரசு அறிவுரை!

 புது டெல்லி,மே 03 கோவிட்-19 பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான சூழலில் பழங்குடியினருக்கு உதவுவதற்கும், சிறு வன உற்பத்திப் பொருள்களைச் சேகரிக்க இது உச்சபட்ச காலம் என்பதைக் கருத்தில் கொண்டும், அவற்றை விரைந்து கொள்முதல் செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சிறு வன உற்பத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொண்டுள்ளன. 10 மாநிலங்களில் இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. 2020-21 நிதியாண்டுக்கான கொள்முதல் இதுவரை ரூ.20.30 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]

Continue reading …

பேரழிவு ஏற்படும்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்தக் கூடாது – அன்புமணி எச்சரிக்கை!

Comments Off on பேரழிவு ஏற்படும்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்தக் கூடாது – அன்புமணி எச்சரிக்கை!
பேரழிவு ஏற்படும்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்தக் கூடாது – அன்புமணி எச்சரிக்கை!

சென்னை, மே 3 இந்தியாவில் பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு  விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகமும் இனிவரும் காலங்களில் அடிக்கடி பேரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த திட்டம் மிகவும் ஆபத்தானது. ஒரு நாட்டின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்; பொருளாதாரத்தை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு சுற்றுச்சூழலை சீரழித்து விடக் கூடாது என்பதற்காகத் தான் தொழில்திட்டங்களுக்கும், […]

Continue reading …

வேளாண் பிரச்சினைகள்: பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

Comments Off on வேளாண் பிரச்சினைகள்: பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
வேளாண் பிரச்சினைகள்: பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

புது டெல்லி,மே 02 வேளாண் பிரிவில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார். வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துதலில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள், உபரிப் பொருள்களைச் சந்தைப்படுத்துவதை மேலாண்மை செய்தல், நிறுவனக்கடன்கள் விவசாயிகளுக்குக் கிடைத்தல் மற்றும் தேவையான சட்டப்பூர்வ உரிமையுடன் பல்வேறு தடைகளில் இருந்து வேளாண் பிரிவை விடுவித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு இந்தக் கூட்டத்தில் முக்கியத்துவம் தரப்பட்டது. தற்போதைய சந்தைப்படுத்துதலில் உள்ள சூழல்சார் அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய செயல்உத்தி சார்ந்த […]

Continue reading …

டுபாக்கூர் சித்த மருத்துவர் தணிகாசலம் ஒரு மனநோயாளியா!

Comments Off on டுபாக்கூர் சித்த மருத்துவர் தணிகாசலம் ஒரு மனநோயாளியா!
டுபாக்கூர் சித்த மருத்துவர் தணிகாசலம் ஒரு மனநோயாளியா!

சென்னை, மே 2 நாம் ஏற்கனவே டாக்டர் என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் தணிகாசலம் ஒரு டுபாக்கூர் டாக்டர் என்பதை ஆதாரபூர்வமாக சொல்லியிருந்தோம். தணிகாசலம் மன நிலை பாதிக்கப்பட்டு விட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது காரணம் இதுதான், நான் கொரோனாவை குணப்படுத்துவேன் என சொல்லி சமீபகாலமாக முகநூலில் பேசி அதை தனது கைதடியில் மூலம் யூ டியுபியில் பரப்பி வருகிறார். அவர் ஒரு போலி டாக்டர், அவர் ஒரு மனநோயாளி என்ற விபரம் கூட தெரியாமல் சில நெட்டிசன்கள் […]

Continue reading …

பரிதவித்த விவசாயிகளும் கைகொடுத்த தோட்டக்கலைத் துறை!

Comments Off on பரிதவித்த விவசாயிகளும் கைகொடுத்த தோட்டக்கலைத் துறை!

கடலூர்,மே 02 முக்கனிகளில் முதன்மையானது பலாப்பழம். அளவில் பெரியது மட்டுமல்ல, சுவையிலும் அருமையானது. நமது வரலாற்றில் பலாப்பழத்திற்கு எப்போதும் தனித்த இடம் இருந்தே வந்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களில் பலாமரமும் பலாப்பழமும் பல பாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு எனப் பல சங்கத்தொகைப் பாடல்களில் பலாப்பழம் இடம் பெற்றுள்ளது.  “சிறுகோட்டுப் பெரும்பழம்” என்று கபிலர் குறுந்தொகையில் வியந்து குறிப்பிடுகிறார். சிறு காம்பில் மிகப்பெரிய பழம் முறியாமல் தொங்கிக் கொண்டிருப்பது […]

Continue reading …

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயல்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு!

Comments Off on சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயல்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு!
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயல்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு!

புது டெல்லி,மே 02 இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை இன்னும் செம்மையானதாக ஆக்க உதவும் திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று விரிவான ஆய்வு நடத்தினார். மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், விமான நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்கும் வகையிலும் ராணுவ விவகாரங்கள் துறையின் ஒத்துழைப்புடன், பயண நேரத்தை செம்மையாகக் குறைப்பது, இந்தியாவின் வான்வழிப் பகுதியை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்வது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூடுதல் வருமானம் ஈட்டவும், விமான நிலையங்களில் செயல் […]

Continue reading …

முதல்வரின் மே தின வாழ்த்து !

Comments Off on முதல்வரின் மே தின வாழ்த்து !
முதல்வரின் மே தின வாழ்த்து !

சென்னை, 30 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மே தின வாழ்த்துச் செய்தி : உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உரிமைகள் மறுக்கப்பட்டு, உழைப்புக்கேற்ற ஊதியமில்லாமல், காலநேரமில்லாமல் பணி செய்து, கொத்தடிமைகளாய் அவதியுற்று இருந்த உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர், பல ஆண்டுகளாக ஒற்றுமையுடன் போராடி தங்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பை மூலதனமாக கொண்ட உழைக்கும் […]

Continue reading …