Home » Entries posted by Shankar U (Page 264)
Entries posted by Shankar

விஜய் பிறந்த நாளில் 2 படங்கள் அப்டேட்

Comments Off on விஜய் பிறந்த நாளில் 2 படங்கள் அப்டேட்

நடிகர் விஜய் பிறந்த நாளில் 2 திரைப்படங்களின் அப்டேட்களை வெளியிடப்படப் போவதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் “லியோ.” இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகிறது. ஜூன் 22ம் தேதி விஜய்யின் 49வது பிறந்த நாள் என்பதால் ‘லியோ’ பட […]

Continue reading …

ஆர்.கே.சுரேஷ் மீதான வழக்குக்கு 2 வாரம் அவகாசம்

Comments Off on ஆர்.கே.சுரேஷ் மீதான வழக்குக்கு 2 வாரம் அவகாசம்

ஆரூத்ரா கோல்டு நிறுவனம் ஏராளமான மக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தின் மீது ஏராளமான புகார்கள் வந்த நிலையில் பொருளாதார சிறப்பு பிரிவு போலீசார் ஆருத்ரா நிறுவனத்திற்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தியதுடன், மோசடியில் தொடர்புடைய ஹரிஷ், மைக்கெல் ராஜ் உள்ளிட்ட 13 பேரை கைது செய்ததுடன், 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாய்க்குத் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. […]

Continue reading …

கேரளாவில் பிராட்பேண்ட் சேவையில் போட்டி

Comments Off on கேரளாவில் பிராட்பேண்ட் சேவையில் போட்டி

கேரள மாநிலத்தில் புதுமை சார்ந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில தனியாருக்குப் போட்டியாக பிராட்பேண்ட் இணையதளத்தை துவங்கியுள்ளது. கேரளா மாநிலத்தில் தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக பிராட்பேண்ட் இணையதள சேவை ஒன்றை மாநில அரசு நேற்று முன்தினம் துவங்கியது. கேபான் & கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: “இத்திட்டம் கேரள மாநிலத்தை அறிவுசார் பொருளாதாரமாக மாற்றுவதற்காக புதுமை சார்ந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில் தனியாருக்குப் […]

Continue reading …

போக்குவரத்துத்துறை அசத்தல் அறிவிப்பு!

Comments Off on போக்குவரத்துத்துறை அசத்தல் அறிவிப்பு!

தொலைதூர பேருந்துகளில் முன்பதிவு செய்யும் சேவையில் விரிவாக்கம் செய்து புதிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பல பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த பேருந்துகளில் பயணிக்க ஒரு மாதத்திற்கு முன்பே இருக்கைகளை முன்பதிவு செய்துக் கொள்ள முடியும். அதேபோல தற்போது தமிழக மாவட்டங்களுக்குள் 200 கி.மீ தொலைவிற்கு பயணிக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து […]

Continue reading …

ஏஒன் தாழில்நுட்பத்தால் 4000 பேர் வேலை இழப்பு!

Comments Off on ஏஒன் தாழில்நுட்பத்தால் 4000 பேர் வேலை இழப்பு!

ஏஒன் தொழில்நுட்பம் மற்ற தொழில் நுட்பத்தை விடவும் உலகளவில் மிக அதிகமாக வளர்ந்து வருகிறது. இரண்டே மாதங்களில் இந்த தொழில்நுட்பத்தை 100 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. கடந்த மே மாதம் உலகம் முழுவதும் சுமார் 30,000 பேர் வேலை இழந்த நிலையில் அதில் 4000 பேர் ஏஒன் தொழில்நுட்பத்தால் மட்டுமே வேலை இழந்தனர் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏஒன் என்ற செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக காலப்போக்கில் இன்னும் அதிகமான வேலை […]

Continue reading …

தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் கிளை!

Comments Off on தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் கிளை!

சென்னை ஐஐடி கிளை தென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான தான்சானியா நாட்டில் திறக்கப்பட உள்ளது. சென்னை தவிர வேறு இடங்களில் கிளை திறக்கப்படுவது இதுவே முதல் முறை என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேசிய கல்வி மைய தரவரிசையில் சென்னை ஐஐடி முதல் இடத்தை பிடித்தது. தென்னாபிரிக்க நாடான தான்சானியாவில் சென்னை ஐஐடியின் புதிய கிளை தொடங்க இருக்கிறது. சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி, “விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளிவரும். நமது […]

Continue reading …

ஆவின் பால் நிறுவனத்தில் 2500 லிட்டர் பால் மோசடி!

Comments Off on ஆவின் பால் நிறுவனத்தில் 2500 லிட்டர் பால் மோசடி!

ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கி தினமும் 2500 லிட்டர் பால் மோசடி வேலூர் ஆவின் நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேலூரில் பால் திருட்டு கண்காணிப்பை அதிகாரிகள் தீவிரபடுத்திய நிலையில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நூதனமான முறையில் மோசடி செய்ததன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் திருடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஒரே பதிவு எண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் அந்த […]

Continue reading …

மணிப்பூர் கலவரத்தில், தாய், குழந்தை எரித்துக் கொலை!

Comments Off on மணிப்பூர் கலவரத்தில், தாய், குழந்தை எரித்துக் கொலை!

இரு சமூகத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறிய சம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் 8 வயது மகனையும், தாயையும் உயிரோடு எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் மைத்தேயி இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு பழங்குடியினத்தை சேர்ந்த குக்கி, நாகா சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மாதம் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை கலவரமாக மாறியது. ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் தொடர்ந்து […]

Continue reading …

இரும்பை தலையில் வைத்து சிகிச்சையளித்த மருத்துவர்!

Comments Off on இரும்பை தலையில் வைத்து சிகிச்சையளித்த மருத்துவர்!

லாரி டிரைவர் ஒருவருக்கு விபத்தில் சிக்கியபோது தலையில் தையல் போட்ட மருத்துவர் தலைக்குள் இரும்பு நட்டை வைத்து சிகிச்சையளித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே லாரி ஓட்டுனர் கார்த்திகேயன் என்பவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் தையல் போட்ட நிலையில் ரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. இதையடுத்து உறவினர்கள் கார்த்திகேயனை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து […]

Continue reading …

மாலினி பார்த்தசாரதி தி இந்து குழுமத்திலிருந்து விலகியது ஏன்?

Comments Off on மாலினி பார்த்தசாரதி தி இந்து குழுமத்திலிருந்து விலகியது ஏன்?

நேற்று திடீரென தி இந்து குழுமத்தில் தலைவராக இருந்த மாலினி பார்த்தசாரதி விலகி உள்ளார்.அந்த பதவிக்கு நிர்மலா லக்ஷ்மணன் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்து குழுமத்திலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து மாலினி பார்த்தசாரதி விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “எனக்கான இடமும் பணிக்கான சூழலும் குறைந்து போன நிலையில் தி இந்து நாளிதழின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறேன். எனது சவாலான பணிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்து குடும்பத்திலிருந்து மாலினி […]

Continue reading …