Home » Entries posted by Shankar U (Page 265)
Entries posted by Shankar

‘கஸ்டடி’ அமேசான் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on ‘கஸ்டடி’ அமேசான் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

“கஸ்டடி” திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவானது. இத்திரைப்படம் கடந்த மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படம் வசூல் அளவில் தோல்வி படம் என்றே கூறப்பட்டது. ‘கஸ்டடி’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஜூன் 9ம் தேதி அதாவது வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் அமேசான் […]

Continue reading …

திருப்பதி கோவிலில் நடிகர் பிரபாஸ்!

Comments Off on திருப்பதி கோவிலில் நடிகர் பிரபாஸ்!

திருப்பதி கோவிலில் இன்று தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் தரிசனம் செய்தார். நடிகர் பிரபாஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான “பாகுபலி 1” மற்றும் “பாகுபலி 2” ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். “பாகுபலி” திரைப்படத்திற்குப் பின் அவர் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் பான் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன. அவரது சம்பளமும் அதிகரித்துள்ளது. ஆனால், “பாகுபலி” படத்திற்குப் பின் வெளியான “சாஹோ,” “ராதே ஷியாம்“ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது “ஆதிபுரூஸ்” […]

Continue reading …

பிரபல நடிகர் விருதுகள் பற்றி பேச்சு!

Comments Off on பிரபல நடிகர் விருதுகள் பற்றி பேச்சு!

“நிஷாந்த்,” “பூமிகா,” “ஜூனுன்,” “ஸ்பர்ஷ்,” “பவானி பவை,” “ஓம்காரா,” “மஹாரதி,” “இஷ்கியா” உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நசருதீன் ஷா. விருதுகளை பற்றி பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான நசுருதீன் ஷா அவமதித்துக் கருத்து கூறியதாக ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் அவர், “சினிமாவில் கதாப்பாத்திரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைப்பவர்தான் சிறந்த நடிகர், தற்போது திரைத்துறையில் இருக்கும் நடிகர்களில் ஒருவரை தேர்வு செய்து அவரை இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் என்று யாரோ ஒருவர் அறிவிப்பது எந்த […]

Continue reading …

ஏஐ ரோபோவை திருமணம் செய்த பெண்!

Comments Off on ஏஐ ரோபோவை திருமணம் செய்த பெண்!

நுண்ணறிவு ரோபோவை அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் செயற்கை திருமணம் செய்துள்ளார். வினோதமாகவும், விசித்திரமாகவும் இந்த உலகில் நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ரோசன்னா ரமோஸ் (36) என்பவர் சக்தி வாய்ந்த அல்காரிதம்கள் மற்றும் இயந்திர கற்றல் திறன்கள் பயன்படுத்துவதில் அதிகமான ஆர்வம் கொண்டவர். அவரது விருப்பம் மற்றும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் திறனுடைய செயற்கை நுண்ணறிவு ரோபோ ஒன்றை உருவாக்கினார். அதற்கு எரன் கார்டல் என்று பெயரிட்டார். தற்போது, […]

Continue reading …

விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Comments Off on விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

தனது விளைச்சல் நிலத்திலிருந்து விவசாயி ஒருவர் கைப்பற்றிய வைரத்தை 2 கோடிக்கு விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூர் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிரி, மஹாதேவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மழை பெய்த பின்னர், வைரக்கற்கள் தானாக வெளிவருவதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு விவசாயி ஒருவர் ரூ.60 லட்சம் வைரத்தை உள்ளூர் வணிகரிடம் அதிக தொகைக்கு விற்றதாக தகவல் வெளியானது. அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு கர்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி 2 […]

Continue reading …

ரஜினி படம் தாமதத்திற்கு லாகா காரணமா?

Comments Off on ரஜினி படம் தாமதத்திற்கு லாகா காரணமா?

பெரிய நடிகர்களை வைத்து படத்தை தயாரிப்பதில் லைகா நிறுவனம் தனி இடத்தை பிடித்துள்ளது. இப்போது அஜீத்தின் “விடாமுயற்சி” மற்றும் ரஜினி மற்றும் ஞானவேல் இணையும் என இரண்டு படங்கள் உள்ளன. இதில் ஞானவேல் இயக்கும் படத்துக்கான அறிவிப்பு எப்போதோ வெளியானாலும், இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்த படத்தின் கதைக்களம் பற்றி சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிப்பதாகவும், அவர் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் […]

Continue reading …

சிவராஜ் குமாரை இயக்கப்போகும் முன்னணி இயக்குனர்!

Comments Off on சிவராஜ் குமாரை இயக்கப்போகும் முன்னணி இயக்குனர்!

“ஜெயிலர்” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்து வருகிறார். படத்தில் அவர்தான் வில்லன் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படம் மட்டுமில்லாமல் தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொழி படங்களில் அவர் நடித்ததில்லை. இப்போது தமிழில் அவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்துள்ள நிலையில் […]

Continue reading …

சார்ஜிங் பாய்ண்ட் 100 இடங்களில் அமைக்க திட்டம்!

Comments Off on சார்ஜிங் பாய்ண்ட் 100 இடங்களில் அமைக்க திட்டம்!

தமிழக மின்வாரியம் தமிழகத்திலுள்ள 100 இடங்களில் இ&-வாகனங்களுக்கு மின்சார சார்ஜிங் பாயிண்ட் அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுதும் எலக்ட்ரிக் வாகனங்கள் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சார்ஜிங் பாயிண்ட் நிலையங்களும் அதிகரித்து வருகின்றன. அவ்வகையில் தனியார் பலர் எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை வைத்திருக்கிறது. தமிழகம் மின்வாரியமே தற்போது சார்ஜிங் நிலையங்களை வைக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 100 இடங்களில் பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய மின்சார […]

Continue reading …

சென்னை – இலங்கை இடையே சொகுசுக் கப்பல்!

Comments Off on சென்னை – இலங்கை இடையே சொகுசுக் கப்பல்!

ஏற்கனவே சென்னை மற்றும் இலங்கைக்கு இடையே பயணிகள் சொகுசு கப்பல் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் சொகுசு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எம் பி எம்பிரஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த பயணிகள் சொகுசு கப்பலை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று தொடங்கி வைத்தார். இந்த கப்பல் சென்னையில் தொடங்கி […]

Continue reading …

சென்னை சென்ட்ரலிருந்து அரக்கோணம் இடையே ரயில்கள் ரத்து?

Comments Off on சென்னை சென்ட்ரலிருந்து அரக்கோணம் இடையே ரயில்கள் ரத்து?

மின்சார ரயில்களின் நேரங்களில் மாற்றம் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் வழியில் ரயில் தளவாட பராமரிப்பு பணிகள் காரணமாக நேரத்தில் மாற்றம் மற்றும் பகுதியாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, மூர் மார்க்கெட்டிலிருந்து ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மின்சார ரயில் ஜூன் 7,8 மற்றும் 9ம் தேதிகளில் முழுமையாக ரத்து. சென்னை பீச்சிலிருந்து அரக்கோணம் […]

Continue reading …