
சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலாஷேத்ரா விகாரத்தில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன்னுக்கு ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. ஹரி பத்மன் உள்பட நான்கு பேர் மீது சென்னையிலுள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர் தனக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியதையடுத்து கைது செய்யப்பட்டனர். பேராசிரியர் ஹரி பத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. ஹரி பத்மனின் ஜாமின் மனுவை தள்ளுபடி […]
Continue reading …
இன்று ஷிவேலுச் என்ற எரிமலை ரஷ்யாவில் வெடித்து சிதறியதில் சுமார் 10 கி.மீட்டர் உயரத்திற்கு சாம்பல் எழும்பியுள்ளது. ரஷியாவில் அதிபர் புதின் உத்தரவின் படி உக்ரைன் நாட்டின் மீது போர் நடந்து வருகிறது. ரஷியாவின் கம்சாட்ஸ்க் என்ற தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச் என்ற எரிமலை இன்று வெடித்துள்ளது. இதில், சுமார் 10 கிமீட்டர் உயரத்திற்குச் சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது. அதிகாரிகள் 15 கி.மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் வெடிப்புகள் எந்நேரத்திலும் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த […]
Continue reading …
திருமணம் ஆகாத சிறுமி பிரசவத்திற்கு பின் உயிரிழந்ததால் மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமி திருமணமாகாத நிலையில், கர்ப்பமானதால் பெற்றோர் அதிர்ச்சசியடைந்துள்ளனர். அவரை அங்கேயுள்ள தனியார் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி மகளை அனுமதித்தனர். கடந்த 7ம் தேதி சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர், சிறுமியின் உடல் நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் […]
Continue reading …
துணை ஜெயிலர் பணியிடங்களை நிரப்புபவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சிறைத்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சிறைத்துறையில் காவல் அதிகாரிகள், சமையாளாளர்கள், உதவியாளர்கள் என பல்வேறு பணிகளில் பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வபோது சிறைத்துறையில் காலியாகும் பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் நிரப்பப்பட்டுகின்றன. அவ்வகையில் தற்போது தமிழ்நாடு முழுதும் சிறைச்சாலைகளில் 59 துணை ஜெயிலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துணை ஜெயிலர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி 59 துணை ஜெயிலர் […]
Continue reading …
பாஜக நிர்வாகி செல்வகுமார், செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக நிர்வாகி செல்வகுமார் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழக பாஜகவின் ஐடி விங் மாநில தலைவராக இருக்கும் செல்வகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
Continue reading …
சிறுகுறு நிறுவனங்கள் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20ம் தேதி சிறுகுறு நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு சிறு குறு தொழில் சங்கத்தின் துணைத்தலைவர் சுருளிவேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எங்களது செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மின்வெட்டால் தொழில் முனைவோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 20-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொழில் நிறுவனங்களை […]
Continue reading …
இந்திய வானிலை ஆய்வு மையம் இனிமேல் வெயில் தான், மழைக்கு வாய்ப்பில்லை என அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுதும் கோடை வெயில் கொளுத்தி வந்தாலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 12 முதல் அதாவது இன்று முதல் ஏப்ரல் 15 வரை வறண்ட வானிலையே இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை […]
Continue reading …
இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால் நள்ளிரவு 1 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல்-2023 &16வது சீசன் தற்போது நடைபெறுகிறது. இதில், மொத்தம் 10 அணிகள் இடம்பெற்று விளையாடி வருகின்றனர். இம்முறை யார் கோப்பையைக் கைப்பற்றுவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் எழுந்துள்ளது. அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன. இன்று சென்னை சேப்பாக்கத்தில், ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி […]
Continue reading …
லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய் நடிப்பில் “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. அங்கு மோசமான வானிலை நிலவினாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி முடித்தனர். இப்போது சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. லோகேஷ், ரஜினி நடிக்கும் படத்தை இயக்கப் […]
Continue reading …
தமிழ் புத்தாண்டு சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் தென் மாவட்ட மக்களின் வசதிக்காக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. தமிழ் புத்தாண்டு வெள்ளிக்கிழமை வருவதாலும் அடுத்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதாலும் சென்னையில் பணிபுரிந்து வரும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகை […]
Continue reading …