Home » Entries posted by Shankar U (Page 372)
Entries posted by Shankar

இயக்குனர் முத்தையாவின் முயற்சி!

Comments Off on இயக்குனர் முத்தையாவின் முயற்சி!

இயக்குனர் முத்தையா தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தென் தமிழகக் கதைகளன்களை தன்னுடைய திரைப்படத்தில் தொடர்ந்து தனது திரைப்படங்களில் கொடுத்து வருபவர் இயக்குனர் முத்தையா. சசிக்குமார் நடித்த “குட்டிப்புலி” மற்றும் கார்த்தி நடித்த “கொம்பன்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் திரைப்படங்கள் வெற்றியைப் பெறுகின்றன. சமீபத்தில் அவர் இயக்கிய “விருமன்” திரைப்படம் […]

Continue reading …

அன்பழகன் சிலை அமைக்க தடை; வழக்கில் திடீர் திருப்பம்!

Comments Off on அன்பழகன் சிலை அமைக்க தடை; வழக்கில் திடீர் திருப்பம்!
அன்பழகன் சிலை அமைக்க தடை; வழக்கில் திடீர் திருப்பம்!

முன்னாள் அமைச்சர் அன்பழகன் சென்னை டிபிஐ வளாகத்தில் சிலையமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அன்பழகன் சிலை அமைக்க தடை கோரி கோவையைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர இருந்தது. திடீரென மனுதாரர் பழனிச்சாமி தனது […]

Continue reading …

ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்று பணி வழங்கப்படுமா?

Comments Off on ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்று பணி வழங்கப்படுமா?

செவிலியர்கள் கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கொரொனா வைரஸ் நோயின் பாதிப்பு கடந்த 2020ம் ஆண்டில் நாடு முழுவதும் அதிகரித்த போது, தமிழகத்தில் சுகாதார சேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பலரும் நியமிக்கப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக 2,300க்கும் அதிகமான ஒப்பந்த செவிலியர்கள் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் பணிபுரிந்து வந்தனர். இவர்களது ஒப்பந்த காலம் டிசம்பர் 31ல் முடிவடைந்தது. அவர்களது […]

Continue reading …

ரவிதேஜாவின் ‘தமாகா’ படம் ஹிட்!

Comments Off on ரவிதேஜாவின் ‘தமாகா’ படம் ஹிட்!

நடிகர் ரவிதேஜா தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என அழைக்கப்படுபவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் ஹிட்டாகியுள்ளன. பல திரைப்படங்கள் தமிழிலும் ரீமேக்காகி வெற்றி பெற்றுள்ளன. ரவி தேஜாவின் மார்க்கெட்டில் உச்சம் தொட்ட படம், “கிக்.” இப்படம் தமிழில் “தில்லாலங்கடி” என்ற பெயரில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியானது. கடந்த சில ஆண்டுகளாக தோல்விப் படங்களாக கொடுத்து வந்த ரவி தேஜா, சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீசான “தமாகா” திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார். 40 […]

Continue reading …

பொங்கல் சிறப்பு பேருந்துகள் புக்கிங் முடிந்தது!

Comments Off on பொங்கல் சிறப்பு பேருந்துகள் புக்கிங் முடிந்தது!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது சிறப்பு பேருந்துகள் முழுவதும் புக்கிங் ஆகியுள்ளது. மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொங்கல் பண்டிகைக்காக பலர் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் முன்னதாக சனிக்கிழமையும் விடுமுறையாக உள்ளதால் மக்கள் ஜனவரி 13 வெள்ளிக்கிழமையில் அதிகமாக ஊருக்கு புறப்படுவர் என கணித்து போக்குவரத்து கழகம் […]

Continue reading …

பஞ்சாபில் ஜனவரி 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

Comments Off on பஞ்சாபில் ஜனவரி 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது காலதாமதமாகி உள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் கடும் குளிர் மற்றும் குளிரைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பள்ளிகளுக்கும் ஜனவரி 8ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா அரசு 2023 ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை விடுமுறை என்றும், ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் […]

Continue reading …

அஜீத்தின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது?

Comments Off on அஜீத்தின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது?
அஜீத்தின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது?

நடிகர் அஜீத்தின் அடுத்த திரைப்படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. அஜீத்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “துணிவு.” இவ்வாண்டின் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் இதுவும் ஒன்றாகும். பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் “வாரிசு” படத்துடன் இப்படம் மோதவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெயிலர் ரிலீசாகி 3 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், அஜீத்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், வரும் ஜனவரி 17ம் தேதி இப்படத்தின் […]

Continue reading …

ரிஷப் பாண்டி -குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

Comments Off on ரிஷப் பாண்டி -குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்டி குடும்பத்தினர் தனது மகனுக்கு போதிய ஓய்வு கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது, தடுப்பு பலகையின் மீது மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்து விபத்தில் சிக்கியது. விபத்தில், படுகாயமடைந்த ரிஷப் பண்ட் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில், ரிஷப் பண்ட்டின் உடலின் பல […]

Continue reading …

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்!

Comments Off on ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்!

தைப் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்காக பல பகுதிகளிலும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பல்வேறு மாவட்டங்களில் தை மாதத்தில் நடைபெற்று வருகின்றன. அதில் மதுரையில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இவ்வாண்டு ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக வாடிவாசலில் பூஜை […]

Continue reading …

கமல் – ராஜமவுலி திடீர் சந்திப்பு

Comments Off on கமல் – ராஜமவுலி திடீர் சந்திப்பு

இயக்குனர் ராஜமவுலியும், நடிகர் கமல்ஹாசனும் சமீபத்தில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்த படம் “ஆர்.ஆர்.ஆர்.” உலகம் முழுதும் வெற்றிகரமாக ஓடி ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டி பிரிவில் போட்டியிடுகிறது. ராஜமவுலி அடுத்து மகேஷ் பாபு நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் ராஜமவுலி, கமல் சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளதாகவும், விரைவில் இவர்கள் இருவரும் இணையும் […]

Continue reading …