
அமைச்சர் உதயநிதியிடம் பி.டி.பீரியடில் வேறு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவிகள் கோரிக்கை வைத்தனர். நேற்று உதயநிதி ஸ்டாலின் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இன்று அவர் சென்னையில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பள்ளி நாட்களில் பி.டி.பீரியடில் வேறு வகுப்புகள் எடுப்பதை கைவிட வேண்டும் என மாணவி ஒருவர் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]
Continue reading …
இந்திய வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 19ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. அந்தமான் அருகே வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கி அதே பகுதியில் நீடித்து வருவதாகவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரத் தொடங்கியதும் […]
Continue reading …
பாராளுமன்றத்தில் பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சமுதாயம்த்தை சேர்க்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. பல ஆண்டுகளாக பல அரசியல் கட்சிகள் நரிக்குறவர்கள் என்று கூறப்படும் குருவிக்காரர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்த மசோதா தயாராக இருந்த நிலையில் தற்போது இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குருவிக்காரர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளதை அடுத்து அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறப்பான இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
Continue reading …
ரஷ்யா ராணுவம் உக்ரைன் மீதான போர் தொடுக்க ஆரம்பித்து 10 மாதங்களாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி உக்ரைன் போருக்கு விடுமுறை? அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்து வருகிறது. ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. பல முறை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாததால், இது அண்டை நாடுகளுக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ரஷ்யா இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், […]
Continue reading …
நடிகர் சரத்குமாரை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருப்பது சர்சசையை கிளப்பி உள்ளது. நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். தமிழகம் முழுதும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகிறது. சரத்குமார் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதுபற்றிய விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர் “நான் விளம்பரத்தில் சொல்வதால்தான் ஆன்லைன் ரம்மியை மக்கள் விளையாடுவதாக பலர் சொல்கிறார்கள். நான் எனக்கு […]
Continue reading …
தன் தந்தையை 30 துண்டுகளாக மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பாகல் கோட் மாவட்டத்திலுள்ள முதோல் நகரில் வசித்த பரசுராம் குலாலியின் மகன் வித்தலா(20). பரசுராம் குலாலி, தினமும் குடித்துவிட்டு வந்து அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இதேபோல், குலாலி, தன் மகன் வித்தலாவை எதோ பேசியதாகத் தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதத்தை ஏற்படுத்தவே, ஆத்திரமடைந்த வித்தலா, […]
Continue reading …
சமீபகாலமாக பாலிவுட்டில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எதிராக பாய்காட் டிரண்ட் இணையத்தில் உருவாகி வருகிறது. அமீர்கானின் “லால் சிங் சத்தா” உட்பட பல திரைப்படங்களுக்கு இப்படியான ஹேஷ்டேக்குகள் உருவாக்கியதால் படத்தின் வசூலை கடுமையாக பாதித்துள்ளது. பாலிவுட் சினிமாவுக்கு இவ்வாண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. பலரும் பாலிவுட் சினிமாக்கள் தங்கள் பெயர்களை பேசுவதில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜமௌலி “பாலிவுட் சினிமாவில் கார்ப்பரேட் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அதனால் இயக்குனர் மற்றும் […]
Continue reading …
தலைநகர் டில்லியில் உள்ள துவாரகா எனும் பகுதியில் 17 வயது சிறுமியின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லி யூனியனில் உள்ள துவாரகாவில் இன்று காலை 9 மணிக்கு 17 வயது பள்ளி சிறுமி ஒருவர் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு சக்கரவாகனத்தில் வந்த 2 பேர் சிறுமியின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டனர். இதில், சிறுமியின் முகம், கண்கள் பாதிக்கப்பட்டு, அவரது வலியால் துடித்துள்ளார், தற்போது ஆபத்தான நிலையில் […]
Continue reading …
சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா மையத்திற்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளது. கோவை அருகே உள்ள ஈஷா மையம் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈஷா யோகா மையத்தை கல்வி நிறுவனமாக்க முடியும் என்றும் எனவே கட்டடங்கள் கட்ட விலக்கு பெற உரிமை உள்ளது […]
Continue reading …
இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும், சிகரெட் புகைப்பத்றகும் நியூசிலாந்து நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. புகை இல்லா நாடாக மாற்ற நியூசிலாந்து நாட்டின் அரசு திட்டமிட்டுள்ளது. புகையிலைக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும் சிகரெட் புகைப்பதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. புகைபிடிக்கும் பழக்கத்தை நாட்டு மக்களிடமும் படிப்படியாக குறைத்து 2025ம் ஆண்டுக்குள் புகைபிடிப்பில்லாத நாடாக மாற்ற நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. […]
Continue reading …