
விலங்குகள் நலவாரியம் நடிகர் விஜய் நடித்துள்ள “வாரிசு’’ படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளம், ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் ரசிகர்கள் உள்ளனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு நிகரான பட்ஜெட்டில், தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிப்பில், வம்சி இயக்கத்தில், விஜய்- மற்றும் ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் “வாரிசு.” படம் வரும் பொங்கல்- பண்டிகையொட்டி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளில் படக்குழு மும்முரமான ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் “ரஞ்சிதமே” பாடலும் ரிலீசானது. […]
Continue reading …
கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி செல்வராசு வரும் நவம்பர் 28ம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களும், மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளும் டெல்டா மாவட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த டெல்டா பகுதிகளை தொடர்ந்து தெற்கு ரயில்வேத்துறை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ள நாகை தொகுதி எம்.பி. செல்வராசு, இதைக் கண்டித்து, ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறும்போது, “டெல்டா பகுதிகளை […]
Continue reading …
டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும் என்று அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து அரசியல் கட்சிகள் அந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணிகளும் இம்முறை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தலில் திமுகவை எந்த கூட்டணி வீழ்த்துகிறதோ, அந்த கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கும் என்று […]
Continue reading …
சென்னையில் காவல்துறை பிராங்க் வீடியோ எடுக்கும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளது. சென்னையை சேர்ந்த ரோகித் குமார் வீடியோ வெளியிடும் கட்டெறும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய் மணிவேல், நாகை 360 ஆகிய ஐந்து யூடியூப் சேனல்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். ரோகித் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். பிராங்க் வீடியோக்களால் பாதிக்கப்படும் மக்கள் […]
Continue reading …
திருநெல்வேலியில் தன் மகளையே கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து அருகே பாலாமடை பகுதியில் நர்சிங் படிக்கும் 19 வயது அருணா என்ற இளம்பெண்ணை அவரது தாயாரே கொலை செய்துள்ளார். மகளை கொலை செய்த பின்னர் தாய் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். நர்சிங் படித்து வந்த அருணா, அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை காதல் […]
Continue reading …
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மழை அதிகமாக பெய்தது. அதன்பின் அதில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி தற்போது கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வங்க கடலில் […]
Continue reading …
டில்லியில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களை கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டில்லியின் பாலம் பகுதியை சேர்ந்த தினேஷ்க்கு தர்ஷனா என்ற மனைவியும் கேசவ், ஊர்வசி சைனி என்ற மகனும், மகளும் உள்ளனர். 25 வயதான கேசவ் படித்து முடித்தும் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததுடன், குடிபழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இதனால் அடிக்கடி அவர் வீட்டில் தகறாரு செய்து வந்துள்ளார். அவரை மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து சில […]
Continue reading …
ஹெச்.பி. நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக பல தொழில்நுட்ப ஐடி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் ஆள்குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய நிலையில் அதிலிருந்து பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். டுவிட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, கூகுள் நிறுவனம் ஆகியவை பணியாளர்களை நீக்கி வருவது தொழில்நுட்பத்துறையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி […]
Continue reading …
மாணவன் ஒருவன் மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமிரா வைத்து 2000க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாணவனொருவன் பெங்களூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவியர் கழிவறையில் ரகசிய கேமரா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை செய்ததில் அதே கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவனின் செல்போனில் கல்லூரி மாணவிகள் கழிவறையில் இருந்த போது எடுக்கப்பட்ட 2000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் மாணவர்களின் அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை அதில் […]
Continue reading …
கலைஞரின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய, மாநில அரசின் விருதுகள் பெற்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று கனவு இல்லத்திட்டம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் அறிவிப்பின்படி, 2021-2022ம் ஆண்டிற்காக கனவு இல்லத் திட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது மற்றும் கலைஞர் விருது பெற்ற மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன், சாகித்ய அகாதமி விருது பெற்றவரும் கவிஞருமான புவியரசு, பூமணி, கு. மோகனராசு, இமயம், ஆகிய […]
Continue reading …