Home » Entries posted by Shankar U (Page 403)
Entries posted by Shankar

பா.ஜ.க. ஆதரவாளர் மீண்டும் கைது!

Comments Off on பா.ஜ.க. ஆதரவாளர் மீண்டும் கைது!

பா.ஜ.க. ஆதரவாளர் கிஷோர் கே. சுவாமி என்பவர் சமூக வலைதளத்தில் ஆபாசமாகப் பேசியதற்காக சென்னை நகரக் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு கைதுசெய்தது. பாண்டிச்சேரியிலிருந்த இவர், இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கிவரும் கிஷோர் கே. சுவாமி, நவம்பர் மாதத் துவக்கத்தில் மழை, வெள்ளத்தை எதிர்கொள்வது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தொடர்புபடுத்தி ஆபாசமாகத் தோன்றும் வகையில் கருத்துகளைப் பதிவுசெய்திருந்தார். இது குறித்து கிஷோர் கே. சுவாமி மீது இ.பி.கோ. 153, 294 […]

Continue reading …

அண்ணாமலையின் குற்றச்சாட்டு!

Comments Off on அண்ணாமலையின் குற்றச்சாட்டு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மாநில உளவுத்துறை உறக்க நிலையில் உள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. மங்களூரு குண்டுவெடிப்பு விசாரணையில் ஷாரிக் என்பவர் போலி அடையாள அட்டைகளை காட்டி கோவையில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத செயல். இன்று முதல் நாளில் இருந்தே தமிழக பாஜக மட்டுமே கூறி வந்தது. ஷாரிக் […]

Continue reading …

மின்கட்டணத்திற்கு தடையில்லை; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Comments Off on மின்கட்டணத்திற்கு தடையில்லை; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

சமீபத்தில் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று இம்மனு விசாரணைக்கு வந்த நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட மின்கட்டண உயர்வுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதால் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் […]

Continue reading …

இயக்குனர் பாலா எடுத்த முடிவு!

Comments Off on இயக்குனர் பாலா எடுத்த முடிவு!

பல வருடங்களாக குற்றப் பரம்பரையினர் பற்றிய கதையை எடுக்க வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா முயற்சித்தார். சிவாஜி மற்றும் சரத்குமார் நடிப்பில் பூஜை போட்டு போஸ்டரும் வெளியானது. ஆனால் படப்பிடிப்பு தடைபட்டது. பின்னர் மீண்டும் ஒரு முறை முயன்று அப்போதும் அவரால் படமெடுக்க முடியவில்லை. இதேபோல இயக்குனர் பாலாவும் குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை திரைப்படமாக்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. இது சம்மந்தமாக பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையே கடுமையான மோதல் எழுந்தது. ஆனால் இப்போது இருவரும் […]

Continue reading …

நாளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு!

Comments Off on நாளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு!

நாளை விஜய் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர்களை நடிகர் விஜய் சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள “வாரிசு” படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. பொங்கலுக்கு அஜீத்தின் “துணிவு” படமும் ரிலீசாக […]

Continue reading …

மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம்!

Comments Off on மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம்!

அரசு டாக்டர்கள் சங்கம் வீராங்கனை பிரியா வழக்கில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக அவர் உயிரிழந்தார். இதனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது 304ஏ என்ற பிரிவின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவர்கள் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் உடனடியாக சரணடைய நீதிபதிகள் உத்தரவிட்டனர். […]

Continue reading …

கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் விநியோகம்!

Comments Off on கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் விநியோகம்!

விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் முறை அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது ரேசன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கூலி வேலைக்குச் செல்லும் முதியவர்களின் கை ரேகை சரியாக அந்த மெஷினில் பதிவாவதில்லை என்பதால், பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதியவர்களின் கருவிழிப் பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வாங்கும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகிறறது. மேலும், கருவிழி […]

Continue reading …

60 சதவீதம் சுங்கக் கட்டணம் குறைய வாய்ப்பு!

Comments Off on 60 சதவீதம் சுங்கக் கட்டணம் குறைய வாய்ப்பு!

சுங்கக்கட்டணம் தமிழகத்தில் 60% குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 22 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுங்கக் கட்டணம் குறைக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், திமுக எம்பி வில்சன், மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதி கட்காரியிடம் கோரிக்கையை முன்வைத்தார். எனவே, நாடு முழுவதும் உள்ளா தேசிய […]

Continue reading …

பொங்கல் இலவசங்கள் எப்போது?

Comments Off on பொங்கல் இலவசங்கள் எப்போது?

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலை வழங்குகிறது. இவ்வாண்டு இலவச வேஷ்டி சேலை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளது. இன்று தலைமைச் செயலகத்தில் இலவச வேட்டி சேலை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவதைப் போன்று இந்த ஆண்டும் பொங்கல் தினத்தில் வேட்டி சேலைகள் வழங்க […]

Continue reading …

பாகிஸ்தான் வாழ்க என கோஷமிட்ட மாணவி!

Comments Off on பாகிஸ்தான் வாழ்க என கோஷமிட்ட மாணவி!

கல்லூரி மாணவி ஒருவர் விழா ஒன்றில் திடீரென பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பலரும் தங்களுக்கு பிடித்த ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு மாணவி எழுந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார். இதனை பார்த்த மாணவர் ஒருவரும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என […]

Continue reading …