திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி-யிடம் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டார். அப்போது அமைச்சர் டி ஆர் பி ராஜா உடனிருந்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஜி.சி.டி.கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களிடம், “கோவை தொகுதியில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம், தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நாப்பதும் நமதே என வெற்றி பெற்றுள்ளோம். கோவை மண்ணில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பாராளுமன்ற உறுப்பினரை தந்துள்ளனர். திமுக கோவையை […]
Continue reading …விஜய் வசந்த் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தந்தை மறைவை தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவரை எதிர்த்து போட்டியிட்ட பொன். இராதாகிருஷ்ணனை 1,37,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இடைத்தேர்தலில் வெற்றிகண்டார். மக்களவை தேர்தலில் விஜய் வசந்த் இரண்டாவது முறையாக இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 1,80,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மக்களால் மீண்டும் மக்களவை உறுப்பினராக ஆன விஜய் வசந்த் அவரது தாயார் தமிழ் செல்வியுடன், அகஸ்தீசுவரத்தில் உள்ள தந்தையின் […]
Continue reading …தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த மே 13ம் தேதி ஆந்திர மாநில சட்டமன்றத்தின் 175 தொகுதிகளுக்கும் மக்களவைப் பொதுத் தேர்தலோடு சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார். […]
Continue reading …இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாஜக தனித்து ஆட்சியமைக்க வழி இல்லை என்பதால் பங்குச்சந்தை படுமோசமாக சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் பாஜக கூட்டணி 295 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தனித்து ஆட்சி அமைக்க வழி இல்லை என்றும் கூட்டணி ஆட்சிக்கு மட்டுமே சாத்தியம் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பங்குச்சந்தை இன்று காலை […]
Continue reading …பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததை அடுத்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது. ஆந்திர சட்டசபை தேர்தலில் முடிவின்படி தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக எட்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் கூட்டணியாக போட்டியிட்டன. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 13 தொகுதிகளில் […]
Continue reading …திமுக கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலின் முதல் கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. திமுக கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும் […]
Continue reading …இந்தியளவில் முன்னணியில் உள்ள 6 சுயேட்சை வேட்பாளர்களின் பக்கம் தேசிய கட்சிகளின் கவனம் திரும்பியுள்ளது. 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் நடந்து முடிந்துள்ளது. இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 295 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸின் இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னணியில் உள்ளது. பிற கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். தேர்தலில் தற்போதைய நிலவரப்படி தேசிய கட்சி வேட்பாளர்களையும் தாண்டி 6 […]
Continue reading …தேர்தல் ஆணையம் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தூத்துக்குடி தொகுதியின் முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி 426617 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை அடுத்து அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி என்பவர் 123214 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் 303403. இத்தொகுதியில் நாம் தமிழர் […]
Continue reading …பாஜக சார்பில் இமாச்சல பிரதேசத்தில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பேச்சுகள் எழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பிரபல இந்தி நடிகையான கங்கனா ரனாவத் பல ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளை தொடர்ந்து பேசி வந்தவர். இம்முறை தேர்தலில் பாஜக சார்பில் அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட்டார். […]
Continue reading …புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே ஆறு முறை போட்டியிட்ட ஏழாவது முறையாக போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்துள்ளார். தென்காசி தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும் நிலையில் அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் என்பவர் 338221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். அவருக்கு கிடைத்த வாக்குகள் 182193 ஆகும். அதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் […]
Continue reading …